'ஸ்கை டைவிங்' பயிற்சியில் ஈடுபட்ட 72 வயது தனுஷ் பட நடிகர்

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்டது என்பதும் இந்த படம் திரை அரங்குகள் திறந்த உடன் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ. இவர் ஹாலிவுட்டில் ’பிரேவ் ஹார்ட்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் என்பதும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் இவர் நடித்துள்ள கேரக்டர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜேம்ஸ் காஸ்மோ தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஸ்கை டைவிங் பயிற்சி பெறும் காட்சிகள் உள்ளது. இதுகுறித்து ஜேம்ஸ் காஸ்மோ கூறியபோது, இதுவொரு புதிய அனுபவமாக இருந்தது என்றும் இதற்கான பயிற்சி கொடுத்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்போது ஹாலிவுட்டில் மட்டுமின்றி தனுஷ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதால் கோலிவுட்டிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகள்களின் உதவியால் வயலை உழுத தந்தை: வழக்கம்போல் உதவிய நடிகர் சோனுசூட்

யாருக்காவது உதவி தேவை என்றால் சமூக வலைதளம் மூலம் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு டேக் செய்து உதவி கேட்டால் உடனே உதவி கிடைக்கும் என்பதும்,

திருமணமான ஒரே மாதத்தில் மகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்: காதல் காரணமா?

திருமணமான ஒரே மாதத்தில் பெற்ற மகளை அவரது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசிய சூர்யாதேவி என்ற பெண் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும்,

உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

சமீபத்தில் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் 'ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி படங்களில் அதிகம் பணியாற்றவில்லை என்றும், இந்தியில் எனக்கு வரும் வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிக்கிறது

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.