ரசிகர்களுக்கு தனுஷ் தரும் தீபாவளி விருந்து!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும், திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தங்களது சமூக வலைதளங்களில் ’ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்ற ’புஜ்ஜி’ என்ற வீடியோ பாடல் வரும் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்

வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நேரத்தில் தனுஷ் தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் தீபாவளி விருந்தாக இந்த பாடல் கருதப்படுகிறது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சௌந்தரராஜா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்

More News

ஒரே ஒரு நபருக்கு கடிதம்: சோகமயமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளனர்

யோகிபாபு-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா'படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்க உள்ளனர் என்ற செய்தி வெளியானதை நேற்றே பார்த்தோம்

கமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை: வைரலாகும் புகைப்படம்!

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்பட பல இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

பெற்றோருடன் அஜித்: வைரலாகும் புகைப்படம்!

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் த

அரசியல் தோல்வியைத் தொடர்ந்து குடும்பத்திலும் தோல்வியா??? ட்ரம்ப்பை சுற்றும் அடுத்த பரபரப்பு!!!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட் ட்ரம்ப் கடுமையான தோல்வியை தழுவினார்.