190 நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா தனுஷின் 'ஜகமே தந்திரம்'?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜனவரி 18-ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ்க்கும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் திரைப்படம் ஒன்று இத்தனை நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பொலிஷ், போர்த்துகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் இந்த படம் ஜூன் 18-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.
190 Countries | 17 Languages | One Suruli. #JagameThandhiram on June 18th. pic.twitter.com/hXeVMVsmww
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments