'கர்ணன்' படத்தை அடுத்து 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இன்று காலை வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன்னர் தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகிறது. இந்தப் படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ரிலீஸ் தேதி குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நாளிலேயே அவர் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்