இந்த இரண்டு படங்கள் போல் இருக்கும்: தனுஷின் 'இட்லி கடை' குறித்து தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

தனுஷ் நடிக்க இருக்கும் இட்லி கடை என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இதோடு, நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வைரல் ஆனது.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிக்கும் நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எங்கள் நிறுவனத்தின் முதல் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, தனுஷ் படத்தைதான் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதற்காக அவரிடம் அணுகிய போது, அவர் எந்தவித மறுப்பும் இன்றி உடனடியாக ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர் படத்தின் பணிகள் தொடங்கியது. மேலும், திருச்சிற்றம்பலம், ’யாரடி நீ மோகினி’ போன்ற படங்களில் இருந்தது போல் இனிமையான காட்சிகள் கொண்ட ஒரு படம் ’இட்லி கடை’ இருக்கும். அதே நேரத்தில், குடும்ப சென்டிமென்ட் உடன் சில ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இதில் இடம் பெறும், என்று குறிப்பிட்டார்.

தனுஷ், நித்யா மேனன், அசோக் செல்வன், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

 

More News

விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!! தவெக முதல் மாநாடு தேதியை அறிவித்த விஜய்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் புதிய தேதியை

ப்ரியங்கா பற்றி இப்படி பேசுறதுக்கு, மணிமேகலை பொறுப்பு எடுத்துக்கணும்... ரவீந்தர்

தமிழ் நாட்டின் நிகழ்கால பிரச்னைகளைவிட, நடிகர் விஜயின் மாநாடு குறித்த செய்திகளை விட இப்போது தமிழக மக்களிடம் கருத்து கேட்கும் அளவிற்கு...

மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? குரேஷி வெளியிட்ட வீடியோ..!

கடந்த சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் மற்றும் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,

ஜீ டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகரின் மகள்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகள் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.