close
Choose your channels

இந்த இரண்டு படங்கள் போல் இருக்கும்: தனுஷின் 'இட்லி கடை' குறித்து தயாரிப்பாளர்..!

Friday, September 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிக்க இருக்கும் "இட்லி கடை" என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இதோடு, நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வைரல் ஆனது.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிக்கும் நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "எங்கள் நிறுவனத்தின் முதல் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, தனுஷ் படத்தைதான் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதற்காக அவரிடம் அணுகிய போது, அவர் எந்தவித மறுப்பும் இன்றி உடனடியாக ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர் படத்தின் பணிகள் தொடங்கியது. மேலும், "திருச்சிற்றம்பலம், ’யாரடி நீ மோகினி’ போன்ற படங்களில் இருந்தது போல் இனிமையான காட்சிகள் கொண்ட ஒரு படம் ’இட்லி கடை’ இருக்கும். அதே நேரத்தில், குடும்ப சென்டிமென்ட் உடன் சில ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இதில் இடம் பெறும்," என்று குறிப்பிட்டார்.

தனுஷ், நித்யா மேனன், அசோக் செல்வன், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment