தனுஷின் 'இட்லி கடை'.. வேற லெவல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,January 01 2025]

தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு ஃபர்ஸ்ட் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களும் மாஸாக இருப்பதை அடுத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில், நாயகியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு, மீண்டும் தனுஷ் - நித்யா மேனன் ஜோடி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பர்ஸ்ட் போஸ்டரில், தனுஷ் மிகவும் இளமையுடன் இருக்கும் ஒரு போஸ்டர், ராஜ்கிரன் உடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரண் கெளசிக் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

பொங்கல் ரிலீஸ்.. 'விடாமுயற்சி' விலகியதால் 7 படங்கள் ரிலீஸா?

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு திடீரென தவிர்க்க முடியாத காரணத்தினால் பொங்கல்

புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாடு சென்ற அஜித்.. வைரல் வீடியோ..!

இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில், புத்தாண்டை கொண்டாட பல உலக பிரபலங்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். குறிப்பாக,

ஜாலியாக ஒரு போட்டிங்.. பிரபல நடிகருடன் புத்தாண்டை கொண்டாடும் நயன்தாரா..!

பிரபல நடிகர் மற்றும் அவருடைய மனைவியுடன் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் போட்டிங் செய்யும் புகைப்படத்தை

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுனரை சந்தித்தது ஏன்? தவெக தலைவர் விளக்கம்..!

தமிழக ஆளுநரை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தமிழக வெற்றி கழகம் விளக்கம் வெளியிட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: