தனுஷின் ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

தனுஷ் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சுமார் மூன்று மாதங்கள் தனுஷ் அமெரிக்காவில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் க்ரேனி என்பவர் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள் என்பதும் இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டத்தின் தலைவராக தனுஷ் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சிபிஐ அதிகாரி வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் கோஸ்லிங் நடித்து இருந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ திரைப்படமும் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.