தனுஷின் முதல் நேரடி தெலுங்கு பட டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 23 2021]

தனுஷ் நடிக்கவிருக்கும் முதல் நேரடி தெலுங்கு படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது

தனுஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ’சார்’ என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வெங்கி அட்லூரி என்பவர் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக தனுஷ் ஆசிரியர் கேரக்டரில் நடிக்கவிருப்பதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.