மகன்களுடன் தனுஷ்: தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படம் வைரல்!
- IndiaGlitz, [Sunday,June 20 2021]
ஜூன் 20ம் தேதியான இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய தந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். படகில் சென்று கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் இருக்கும் காட்சியை அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த படத்திற்காக தனுஷ் கேப்ஷனாக, ‘இனிய தந்தையர் தினம் வாழ்த்துக்கள். ஒரு குழந்தையின் முதல் ஹீரோ தந்தைதான் என்பது எனக்கு நன்றாக தெரியும். லவ் யூ நண்பர்களே. நீங்கள் எனக்கு உலகத்தை அர்த்தப்படுத்துகிறீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
தனுஷ் தற்போது அமெரிக்காவில் ’தி க்ரேமேன்’ என்ற ஹாலிவுட் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இதற்காக அவர் அமெரிக்காவுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.