தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆகிவந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழும் பெற்றது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், டிரைலர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார்.

சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா?

அஜித் நடித்த 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் சிவா இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது

எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பாஜக எம்பி: பெரும் பரபரப்பு

மாற்று கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்வதும், சிலசமயம் கைகலப்பில் ஈடுபடுவதும் இந்திய அரசியலுக்கு புதியது அல்ல

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து போவதால் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று