'எனை நோக்கி பாயும் தோட்டா'வின் இறுதியான ரிலீஸ் தேதி: கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Wednesday,October 02 2019]

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும், அறிவித்த தேதியில் இந்த படம் வெளிவராததால் படக்குழுவினர்களும் தனுஷ் ரசிகர்களும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் உறுதியான, இறுதியான ரிலீஸ் தேதி என நவம்பர் 15ஆம் தேதியை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த தேதியில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என்றும் இந்த படத்தின் பொருளாதாரப் பிரச்சினையை அனைத்தும் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் ‘அசுரன்’, நவம்பர் 15ல் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ அதனையடுத்து ‘பட்டாஸ்’ என வரிசையாக தனுஷ் படங்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு தொடர் கொண்டாட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரினே காரணம்: மீண்டும் பிரச்சனையை கிளப்பும் வனிதா

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தாலே பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும் என்பதே கடந்த 100 நாட்களின் பிக்பாஸ் வரலாறாக உள்ளது. முதல் முறை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்தபோது

தனுஷ்-செல்வராகவன் படத்தில் இளம் இசையமைப்பாளர்!

தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரிவுள்ளார் என்பது தெரிந்ததே. அதன் அதில் முதல் படமான 'அசுரன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.

தனுஷின் 'அசுரன்' ரன்னிங் டைம் குறித்த தகவல்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மார்பகம் பற்றி பேச கூச்சப்பட வேண்டாம்: நடிகை வரலட்சுமி

மார்பகம் என்பது நமது உடலில் உள்ள ஒரு அங்கம் என்றும், அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளியே பேச யாரும் கூச்சப்பட வேண்டியதில்லை என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

'தளபதி 64' படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 64' படம் குறித்த தகவல்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூன்று நாட்களுக்கு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அறிவித்தது.