விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதே நாளில் சூர்யாவின் 'என்.ஜி.கே' வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், தீபாவளி கழித்தே இந்த படம் வெளியாக்கும் என்று அறிவித்துள்ளதால் தீபாவளி அன்று 'சர்கார்' சோலோ ரிலீஸ் என கருதப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கி வந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது இதனையடுத்து இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிநாளில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் அதில் 'ஹேப்பி தீபாவளி' என குறிப்பிட்டதால் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று கருதப்படுகிறது.
தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். தனுஷ்-கவுதம்மேனன் முதல்முறையாக இணைந்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்.
‘Twas Joy and honour working with @menongautham @dhanushkraja #ENPT will be a memorable film in my career. Kudos to t team pic.twitter.com/e9lsyKT47k
— M.Sasikumar (@SasikumarDir) September 4, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments