மகா சிவராத்திரி தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகா சிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து ஒன்று காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ் ஆனது 50வது படமான ’ராயன்’ என்ற படத்தில் நடித்து இயக்கி முடித்துள்ள நிலையில் இதையடுத்து அவர் தனது சகோதரி மகன் ஹீரோவாக நடிக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அது மட்டும் இன்றி பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை தற்போது ’DNS’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக ’DNS’ படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்களும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 8 ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்
#DNSthemovie Title with Glimpse on March 8 on the Occasion of Mahashivratri..🔥🥳
— DreamZ Entertainment UK (@TeamDreamZE) March 6, 2024
STAY TUNED.....!!!#DNS OVERSEAS RELEASE BY @TeamDreamZE ❤️🔥@dhanushkraja @iamnagarjuna @sekharkammula @iamRashmika @SVCLLP @amigoscreation #DNS pic.twitter.com/L2pnAuXBwd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com