படப்பிடிப்பே இப்பதான் தொடங்கியது.. அதற்குள் வேற லெவல் பிசினஸ்.. தனுஷின் 'DNS' படத்தின் மாஸ் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானாலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் அதற்குள் இந்த படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’DNS’ என்று தற்போதைக்கு அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பிரமாண்டமாக பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ஃப் என்பவர் இணைந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை ட்ரீம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட போவதாகவும் அறிவித்துள்ளதை அடுத்து தனுஷ்க்கு இன்னொரு வெற்றி திரைப்படம் உறுதி ஆகி உள்ளதாக தெரிகிறது.
Explosive Announcement 💥📢 !!!
— DreamZ Entertainment UK (@TeamDreamZE) February 10, 2024
We are Happy to announce our collaboration🤝 with @SVCLLP & @amigoscreation for overseas release of #DNS#DNS OVERSEAS RELEASE BY @TeamDreamZE
All set for #DNS ❤️🔥@dhanushkraja @iamnagarjuna @iamRashmika @sekharkammula @AsianSuniel… pic.twitter.com/RwdEsk9d1Z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments