யாரும் எதிர்பார்க்காத டைட்டில்.. தனுஷின் 'டி51' படத்தின் டைட்டில் வீடியோ ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் ‘டி51’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று சிவராத்திரி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைகள் இந்த டைட்டில் குறித்த வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’குபேரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் ஐந்து மொழி போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்ததும் இந்த படம் இதுவரை இல்லாத வகையில் தனுஷின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.