தனுஷின் 'D51' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விஜய், நயன் படத்துடன் கனெக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து முடித்துள்ள 49வது திரைப்படமான ’கேப்டன் மில்லர்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 50வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தனுஷ் இந்த படத்தில் நடித்து இயக்க இருப்பதாகவும் வெளியான செய்தி அறிந்ததே.
இந்த நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் 51-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தனுஷின் ‘D51’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அனாமிகா’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் சேகர் கம்முலா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Presenting to you all the Next of multi-talented @dhanushkraja - #D51 🤘🏾💸#HappyBirthdayDhanush ❤️
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) July 27, 2023
A @sekharkammula film.
Shoot begins soon.@AsianSuniel @puskurrammohan @SVCLLP @amigoscreation @UrsVamsiShekar @RIAZtheboss @V4umedia_#SekharKammula #Dhanush #NarayanDasNarang pic.twitter.com/TbyQtT6qQq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments