close
Choose your channels

'D50' படத்தின் செம அப்டேட்.. இந்த ஒரே காரணத்தால் படம் சூப்பர் ஹிட்!

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து இயக்க இருக்கும் அவரது 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தகவல் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கி வருகிறது.

’பா பாண்டி’ என்ற படத்திற்கு பின் தனுஷ் இந்த படத்தை இயக்குவதோடு சிறப்பு தோற்றதிலும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தனுஷ் மற்றும் அனிருத் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்த ’திருச்சிற்றம்பலம்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’D50’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் போட்டோஷூட் நடந்தததாகவும், அதில் தனுஷ், அனிருத் கலந்து கொண்டதை எடுத்து மீண்டும் தனுஷ் அனிருத் இணைவது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’புதுப்பேட்டை’ ஸ்டைலில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment