'D50' படத்தின் அட்டகாசமான போஸ்டர்.. தனுஷின் வேற லெவல் லுக்..!

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

தனுஷின் 50 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்து இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ள சன் பிக்சர்ஸ் அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதில் தனுஷின் வேற லெவல் லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தனுஷ் ஏற்கனவே ’பா பாண்டி’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் இது அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'2018' பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதியா?

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான '2018' படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் ரெடின்னா, நானும் ரெடி.. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேட்டி..!

நடிகர் விஜய் ரெடி என்றால் நானும் ரெடி என்று பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஜெயம் ரவியின் 'ஜெனி' படத்தின் 3 நாயகிகள் இவர்கள் தான்.. பூஜை புகைப்படங்கள்..!

ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியானது என்பதும் இந்த படம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 வது படம் என்ற அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.

சுதா கொங்கராவின் அடுத்த படத்தை மறைமுகமாக அறிவித்த ஜிவி பிரகாஷ்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது 'சூரரைப்போற்று' ஹிந்தி படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த மறைமுகமான அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.