பூஜையுடன் தொடங்குகிறது தனுஷின் அடுத்த படம்..! இதுவரை இல்லாத புதிய லுக்..!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

நடிகர் தனுஷ் கடந்த சில மாதங்களாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று அவர் திடீரென தாடி மற்றும் முடியை எடுத்துவிட்டு திருப்பதியில் சென்று குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்டார் என்பதை பார்த்தோம். மொட்டை தலையுடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் நேற்று முழுவதும் இணையத்தில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் இந்த பூஜையில் தனுஷ் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் தனுஷ் இயக்கி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான், துஷாரா விஜயன். அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராமன், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். தனுஷ் இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் மொட்டைத்தலையுடன் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணன் தம்பி தங்கை சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட இந்த படம் குடும்ப ஆடியன்ஸ்களை குறி வைத்து உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பூஜை நாளை தொடங்க இருப்பதை அடுத்து நாளை மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.