தனுஷின் 'D50' படத்தில் இவர் தான் நாயகியா?

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

தனுஷின் 50வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை ’பா பாண்டி’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் நாயகியாக ‘சார்பாட்டா பரம்பரை’, ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ போன்ற படங்களில் நடித்த துஷாரா விஜயன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தரப்பினார் உறுதி செய்துள்ளதாகவும், அவர் இந்த படத்தில் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க காளிதாஸ் ஜெயராமன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வடசென்னை பின்னணியை கொண்ட கதை அம்சம் உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ’வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.