தனுஷின் 'D50' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வேற லெவல் டைட்டில்..!

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

நடிகர் தனுஷின் 50வது திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து அவரே இயக்கி வந்தார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்திற்கு ’ராயன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அந்த டைட்டில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது,

மொட்டை தலையுடன் அட்டகாசமாக மிரள வைக்கும் அளவுக்கு இருக்கும் தனுஷின் இந்த கெட்டப் நிச்சயம் அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் இந்த ஆண்டு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவின் 'கர்ணா' படத்தின் நாயகி இவர்தான்: உறுதி செய்த 'வலிமை' தயாரிப்பாளர்..!

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 'கர்ணா' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பது  தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அருண்விஜய்யின் மிரட்டலான நடிப்பில் 'வணங்கான்' டீசர்.. சூர்யா பார்த்தால் வருத்தப்படுவாரோ?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்.. என்ன வழக்கு? தீர்ப்பின் முழு விவரங்கள்..!

பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு ஒரு மாத சிறை

தமிழக பட்ஜெட்டில் ரூ.500 கோடியில் ஒரு சூப்பர் அறிவிப்பு.. திரையுலகினர் மகிழ்ச்சி..!

2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 500 கோடியில் பூந்தமல்லி அருகே பிரமாண்டமான திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம்

ரிலீசுக்கு தயாரான கவுண்டமணி - யோகி பாபு திரைப்படம்.. முக்கிய அப்டேட்..!

கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது