தனுஷ் படத்தில் நடிக்கும் மூன்று பிரபல ஹீரோயின்கள் இவர்கள் தானா?

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

தனுஷ் நடிக்கவிருக்கும் 'D44' என்ற திரைப்படத்தில் மூன்று பிரபல ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் இந்த நிலையில் தற்போது அவர்கள் யார் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'D44' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மூன்று பிரபல ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது அவர்கள் தற்போது நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், மற்றும் ஹன்சிகா ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஹன்சிகா தனுஷுடன் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்முதலாக தனுஷுடன் இணைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தனுஷின் அடுத்த திரைப்படத்தில் மூன்று பிரபல ஹீரோயின்கள் நடிக்க இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.