தனுஷின் 'D44' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்: பூஜை புகைப்படங்கள் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின் 44வது திரைப்படமான ‘D44' திரைப்படத்தின் அறிவிப்புகள் நேற்று அடுத்தடுத்து வெளி வந்தது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷிகன்னா ஆகிய ஐந்து முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து அறிவித்தது. அதுமட்டுமன்றி இன்று மாலை ஆறு மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்திற்கான பூஜை இன்று நடந்த நிலையில் இந்த பூஜையில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்
இது குறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
.@dhanushkraja's #D44 shooting commences Today! #D44Poojai@anirudhofficial #MithranRJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @RIAZtheboss pic.twitter.com/bIXIu2gStU
— Sun Pictures (@sunpictures) August 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com