தனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் ‘D43’ படத்தின் முக்கிய அறிவிப்பு சற்றுமுன் வெளியானதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்

சமீபத்தில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவரும் ‘D43’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் நடித்து வரும் ‘D43’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. ‘D43’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் ஜோடியாக முதன்முதலாக மாஸ்டர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் பாடல்களை விவேக் மற்றும் கார்த்திக் நரேன் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.