பசியோட சுத்திகிட்டு இருக்குற சிங்கத்துக்கு ஒரு இரை கிடைக்குது.. 'கேப்டன் மில்லர்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்’ என்ற படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை துப்பாக்கி சண்டை மற்றும் போர்தான் இருக்கும் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. தனுஷுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவம், அதனால் அவர் கேப்டன் வில்லனாக மாற வேண்டியவர் ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு போராளியாக மாறியது, அதனால் ஏற்படும் விளைவுகள், இரு பக்கமும் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

படத்தில் அதிக துப்பாக்கி மற்றும் ஸ்டண்ட் காட்சி இருக்கிறது என்பதால் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கும் தனுசு ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் பொங்கல் விடுமுறைக்கு ஏற்ற ஒரு நல்ல படமாகவும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாகவும் இருக்கும்.

இந்த படத்தின் டிரைலரில் உள்ள சில வசனங்கள்:

* வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன்

* நீ யாரு, உனக்கென்ன வேணுங்கிறத பொறுத்து, நான் யாருங்கிறது மாறும்..

* உன்னை மாதிரி நானும் ஒரு கொலகாரனா இருந்திருந்தா, அவன நானே கொன்னுருப்பேன்

* கெட்டவன கொன்ன நீ நல்லவனா தான இருப்ப

* பசியோட சுத்திகிட்டு இருக்குற சிங்கத்துக்கு ஒரு இரை கிடைக்குது.. அதை எப்படியாவது தூக்கிட்டு போயிரலாம்ன்னு ஒரு கழுதப்புலி கூட்டமே அலையுது.. அப்போ, அந்த இரையை ஓநாய் தூக்கிட்டு போனா என்ன ஆகும்?