'லியோ' படம் பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நாளை முக்கிய நாடுகளில் ’லியோ’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'லியோ’ மட்டுமின்றி முக்கிய இந்திய படங்கள் வெளியாகும் திரையரங்குகளிலும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை 'லியோ’ படம் பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு ’கேப்டன் மில்லர்’ டீசரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், நிவேதா, ஜான் கொக்கைன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது
The #CaptainMiller Teaser will now play across major foreign Countries in all Indian movies from October 19th 💥🎉
— Sathya Jyothi Films (@SathyaJyothi) October 18, 2023
Overseas Release by @LycaProductions @dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/zCZUh2WwKa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments