குடல உருவி மாலையா போட்டு காவல் காத்து நின்னாரு.. 'கேப்டன் மில்லர்' சிங்கிள் பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’கோரனாறு’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை உமாதேவி எழுதியிருக்க தேனிசை தென்றல் தேவா, சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அலெக்சாண்டர் பாபு ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அசத்தலாக உள்ளது என்றும் குறிப்பாக தேனிசை தென்றல் தேவாவின் குரலை நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கேட்பது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்றும் இந்த பாடல் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களை ஆகி உள்ள நிலையில் ரசிகர்களை முழுமையாக கவர்ந்து விட்டது என்பதும் கண்டிப்பாக இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படம் பொங்கல் விருந்தாக நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout