தனுஷின் 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு எப்போது? செம லோகேஷன் என தகவல்!

தனுஷ் நடிக்கவிருக்கும் ’கேப்டன் வெலர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் லொகேஷன் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக்காகிதம் என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’கேப்டன் மில்லர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் இருந்து தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தென்காசி, குற்றாலம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த இடத்தில் இதுவரை தமிழ் சினிமா படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே செம லொகேஷனில் தனுஷின் அடுத்த படத்தின் அடுத்த படமான ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் - இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் தனுஷின் வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வேட்டை தொடங்குற நேரம், சிங்கத்தோட இன்னொரு இளசிங்கமும் சேர்ந்துச்சு: 'விக்ரம்' 100வது நாள் சக்ஸஸ் வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் சமீபத்தில் இந்த படம் நூறாவது நாஎன்பதையும் பார்த்தோம் 

'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க மறுத்த அமலாபால்: காரணம் இதுதான்!

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஒட்டுமொத்த திரையுலகினரும் காத்திருந்த நிலையில் வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை மறுத்ததாக நடிகை அமலா பால்

'விக்ரம்' படம் பார்த்த கமல் ரசிகருக்கு சாதனை விருது: என்ன செய்தார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய இந்தப் படம் சுமார் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது. 

'ஆர்.சி 15' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம்: எஸ்.ஜே.சூர்யா கூறிய ஆச்சரியமான தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆர்.சி 15'. ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து

'வேட்டையாடு விளையாடு 2' படத்தில் கமல் கேரக்டர் இதுதான்: ஜெயமோகன் தகவல்!

கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில்