தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி.. ரஜினி, சிவகார்த்திகேயன் படத்துடன் மோதலா?

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’, சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படமும் பொங்கல் ரிலீஸ் என்பதால், பொங்கல் நாளில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கிடைக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீபாவளி அன்று வெளியாகும் டீசர்? ரஜினி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று

பிரெய்ன் கீழே விழுந்துருச்சா... மாயா குரூப்பை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில்  கீழே இருந்து ஏதோ எடுப்பதை போல பூர்ணிமா செய்தார். அப்போது விசித்ரா 'இப்ப என்ன எடுத்த' என்று கேட்கும் போது

திருமணத்திற்கு பின் கீர்த்தி பாண்டியனின் ரொமான்ஸ் பதிவு.. வைரல் புகைப்படம்..!

 நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிகளுக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலர் வாழ்த்துக்களை

'ராஜன் இஸ் பேக்'.. வெற்றிமாறன் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்..!

அமீர், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில்  உருவாகி வரும் இந்த

இதை கூட செய்யலேன்னா, உங்களுக்கு கண்ணகி பக்கத்துல சிலையா வைக்க முடியும்: கூல் சுரேஷ்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இதை கூட செய்யவில்லை என்றால் உங்களுக்கு கண்ணகி சிலை பக்கத்தில் சிலையா வைக்க முடியும் என கூல் சுரேஷ் மிகவும்  வருத்தமாக கூறிய வீடியோ