தனுஷின் 'கேப்டன் மில்லர்'.. சிவராஜ்குமாருக்காக செய்யப்படும் புதிய மாற்றம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் நடந்து வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது என்பதை பார்த்தோம்.\

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் உடன் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட வேண்டும் என்று கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையை பெற்ற கேஆர்ஜி நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ஒப்புக்கொண்டு இந்த படம் கன்னடத்தில் வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சிவராஜ் குமார் நடித்ததற்கே, அந்த காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கர்நாடக மாநிலத்தில் கிடைத்தது. இந்த நிலையில் 'கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த படம் கர்நாடக மாநிலங்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், பிரியங்கா, சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்த வார எலிமினேஷனில் திடீர் திருப்பம்.. எதிர்பாராத டிவிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில்

'லியோ' சிறப்பு காட்சி குறித்து தமிழக அரசின் உத்தரவு.. அதிகாலை காட்சி உண்டா?

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் 'லியோ' திரைப்படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'லியோ' புரமோஷன் நிகழ்ச்சி.. துபாய்க்கு பதில் இந்த இந்திய நகரத்திலா? ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி துபாயில் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது துபாய்க்கு பதில் ஒரு இந்திய நகரத்தை படக்குழுவினர் தேர்வு செய்திருப்பதாக

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்த ஸ்பெஷல் வெப் சீரிஸ்.. 'லேபிள்'  மோஷன் போஸ்டர் ரிலீஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபிள்' வெப் சீரிஸின்  மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

உன்னை ஆர்ட்டிஸ்ட்டா நினைச்சேன் பாரு, என்னை செருப்பால அடிக்கணும்.. நிக்சனுக்கு பதிலடி கொடுத்த ப்ரதீப்..!

நிக்சன் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்ட காட்சிகள் இன்றைய முதல் புரோமோவில் வெளியானது என்பதை பார்த்தோம். நிக்சன் ஆவேசமாக தனக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை