லைகாவுக்கு சென்றது தனுஷின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த போஸ்டரில் டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

லைகா நிறுவனம் இந்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதால் இந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

More News

செப்.28ல் படம் ரிலீஸ்.. ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபலம்..!

ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'தளபதி 68' படத்தில் 3வது முறையாக இணையும் இரட்டையர்கள்.. பூஜை எப்போது?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்தின் ரிலீஸ் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் ஆரம்பகட்ட

'விடாமுயற்சி' படப்பிடிப்பு தேதி.. அஜித்துடன் நடிக்கும் 4 முன்னணி நட்சத்திரங்கள்..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகி கடந்த சில மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தன.

தமிழில் இன்னொரு இரண்டாம் பாகம் திரைப்படம்.. 3 மொழிகளில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் கதை..!

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார் ஏற்கனவே ஒரு சில சயின்ஸ் பிக்சன் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சயின்ஸ் கதையுடன் களம் இறங்க உள்ளதாக தகவல்

'டான்' சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இந்த பிரபல நடிகரா? 'பாகுபலி' உடனும் கனெக்சன்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. முதல் படமான 'டான்' திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து அவர் ரஜினிகாந்த்,