தனுஷின் 'கேப்டன் மில்லர்' ரன்னிங் டைம் இவ்வளவா? சென்சாருக்கு பின் என்ன ஆகும்?

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்’ படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முழுமையான எடிட்டிங் பணி முடிவடைந்து விட்டதாகவும், எடிட்டிங் பணி முடிந்த பிறகு இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும்போது சென்சார் அதிகாரிகள் ஏதாவது கட் செய்தால் ஓரிரு நிமிடங்கள் ரன்னிங் டைம் வித்தியாசமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக இந்த படம் இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பட குழுவினர் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன், ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.