'கேப்டன் மில்லர்' படத்தின் அசத்தலான கெட்டப்: தனுஷ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Monday,September 19 2022]

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’நானே வருவேன்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது.

‘சாணிக்காகிதம்’, ‘ராக்கி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ‘சார்பாட்டா பரம்பரை’ நடிகர் ஜான் கொகைன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் பான் - இந்திய படமாக உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் கெட்டப்பை வெளியிட்டுள்ள நிலையில் தனுஷின் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கூலிங் கிளாஸ் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலில், ஸ்டைலிஷ் தாடியுடன் இருக்கும் தனுஷின் இந்த வித்தியாசமான கெட்டப்பை பார்த்து அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.