தனுஷின் 'கேப்டன் மில்லர்' சென்சார் தகவல்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சரியான ரிலீஸ் தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி உடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12ஆம் தேதியை அடுத்து 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் பொங்கல் திருநாளின் தொடர் விடுமுறை என்பதால் இந்த படம் ஓப்பனிங் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
U/A certificate #CaptainMiller 😎
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 29, 2023
KIDS, YOUTH & FAMILIES get ready for the biggest Action Extravaganza #CaptainMillerPongal 🔥🔥
JANUARY 12th,2024 Blasting Theatres Worldwide@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/ox4lg5x21c
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments