தனுஷின் 'கேப்டன் மில்லர்' சென்சார் தகவல்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சரியான ரிலீஸ் தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி உடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12ஆம் தேதியை அடுத்து 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் பொங்கல் திருநாளின் தொடர் விடுமுறை என்பதால் இந்த படம் ஓப்பனிங் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

எலிமினேஷனில் புது ட்விஸ்ட்.. தப்பித்தார் மாயா.. அப்படியென்றால் எவிக்ட் செய்யப்பட்டது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எலிமினேஷனில் புது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது

சில மூஞ்சிகளை எல்லாம் பார்த்தா வெறுப்பா இருக்குது: விசித்ரா சொல்வது யாரை? தினேஷை அல்ல..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் எலியும் பூனையும் போல ஆரம்பம் முதலே சண்டை போட்டு வருகின்றனர். தினேஷ் குறித்து விசித்ராவும் விசித்ரா குறித்து

என் முதல் படத்துல இருந்த 2 பேரும் இப்ப உயிரோட இல்லை.. விஜயகாந்த் குறித்து நமீதா..!

நடிகை நமீதா தமிழில் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அந்த படத்தில் தன்னுடன் பணிபுரிந்த இரண்டு பேருமே

சாலிகிராமம் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை பெயர்.. வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?

சாலிகிராமம் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை பெயர் என பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு, தமிழ்  திரைப்பட பத்திரிகையாளர்கள்

துபாயில் இருந்து இரங்கல் தெரிவித்த அஜித்.. பிரேமலதாவுக்கு தொலைபேசியில் ஆறுதல்..!

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தற்போது துபாயில் இருக்கும் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளதோடு தொலைபேசியில் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.