'கர்ணன்' படத்தை அடுத்து தனுஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 6-ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான AtrangiRe படத்தில் அக்சயகுமார், சாரா அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் AtrangiRe திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனுஷ் நடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தனுஷின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
AKSHAY KUMAR - DHANUSH - SARA ALI KHAN: RELEASE DATE LOCKED... #AtrangiRe - starring #AkshayKumar, #Dhanush and #SaraAliKhan - to release in *cinemas* on 6 Aug 2021... Directed by #AanandLRai... Bhushan Kumar #TSeries presentation. pic.twitter.com/npKZ9WqKxB
— taran adarsh (@taran_adarsh) February 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments