தனுஷின் 'அசுரன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 08 2019]

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்' அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளியன்று இந்த படம் வெளியாகும் நிலையில் அதற்கு அடுத்த நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் ஆயுத பூஜை, விஜய தசமி என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கொண்ட ஒரு நீண்ட விடுமுறையில் இந்த படம் ரிலீசாவது இந்த படத்திற்கு ஒரு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் அசுரன்' படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷுக்கு திருப்புமுனையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

மீண்டும் பணமதிப்பிழப்பா? ஏடிஎம் நோக்கி குவியும் பொதுமக்கள்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, திடீரென 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க

கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர்: ஜெயில் தண்டனைக்கு பதில் கஸ்தூரி தண்டனையா?

பிக்பாஸ் வீட்டில் இன்று கஸ்தூரி புதிதாக நுழைந்த நிலையில் அவர் சிறப்பு விருந்தினரா? அல்லது புதிய போட்டியாளராக? என்ற குழப்பம் இருந்து வந்தது.

'மாநாடு' டிராப் குறித்து வெங்கட்பிரபுவின் எமோஷனல் கருத்து!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருந்த 'மாநாடு' திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் அதே நேரத்தில் சிம்புவுக்கு

மீரா விவகாரம்: சேரனை கேலி செய்யும் கஸ்தூரி!

பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது மீராமீதுன் சுமத்திய குற்றச்சாட்டால் சேரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ந்தது. சேரன் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்து

'தல' ரசிகர் இப்படி செய்யலாமா? நடிகர் சாந்தனு ஆதங்கம்

'தல' அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இன்று வெளியான நிலையில் இன்றைய முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெரும்பாலான கோலிவுட் பிரபலங்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வந்தனர்.