தனுஷின் 'அசுரன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,September 23 2019]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அக்டோபர் 4ம் தேதி அசுரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்க உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே அக்டோபர் 2ஆம் தேதி 'சயிர நரசிம்ம ரெட்டி', அக்டோபர் 4ஆம் '100% காதல்' ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. மேலும் விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' திரைப்படமும் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷின் 'அசுரன் திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் பேச்சுக்கெல்லாம் அதிமுக அஞ்சாது: அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒரு 15 நிமிட பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேரன் வெளியேறியதால் கடுப்பான கஸ்தூரி: 

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் நேற்று ஷெரின் முதல் நபராக காப்பாற்றப்பட்டது

தோண்டி துருவாமல் படத்தை ரசியுங்கள்: காப்பான் விமர்சகர்களுக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்

கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் காப்பான் திரைப்படம் ஊடகம் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது 

முடிவுக்கு வந்த சந்தானம் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ஷெரினுக்காக காரசாரமான ரிஸ்க் எடுக்கும் தர்ஷன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது கவின், முகின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய 6 பேர்கள் மட்டுமே உள்ளனர்