அரை மணி நேரம் முந்திய 'அசுரன்' ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

தனுஷ் நடிக்கும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அதாவது இன்று மாலை 5.30 மணிக்கே 'அசுரன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் ஆயுதத்துடன் கண்ணில் வெறியுடன் அந்தரத்தில் தனுஷ் பாய்ந்து வருவது போல் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.