close
Choose your channels

தனுஷின் 'அசுரன்' படம் குறித்த முக்கிய தகவல்

Friday, January 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' என இரண்டு படங்கள் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கும் இந்த படத்திற்கு 'அசுரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26ஆம் தேதி முதல் அதாவவது நாளை முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷுடன் பிரபல மலையால நடிகை மஞ்சுவாரியர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் தனுஷின் படங்களில் வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment