தனுஷின் அடுத்த படம்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின் 50வது திரைப்படமான "ராயன்" சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின், அவர் தனது 51வது படமான "குபேரன்" படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில், தனுஷின் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "தனுஷின் 52வது படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம், நடிப்பு அரசன் தனுஷ் எங்கள் நிறுவனத்தில் நடித்தது நாங்கள் பெருமையாக கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், "எங்கள் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷுக்கு நன்றி. இதுவொரு புதிய பயணத்தின் தொடக்கம்" என்று டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.
இந்த படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் குமார், ஷாலினி பாண்டே போன்ற பலர் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும், இப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
NEW BEGINNINGS! 💥
— DawnPictures (@DawnPicturesOff) September 17, 2024
Dawn Pictures launches with a bang!
We are proud to announce our maiden project #D52, starring @dhanushkraja sir 🔥@aakashbaskaran @wunderbarfilms @DawnPicturesOff #DawnPictures @theSreyas pic.twitter.com/Iet4X0cdD1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com