close
Choose your channels

தனுஷின் 50வது படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

Monday, April 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் அவரது நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தனுஷ் 50’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தனுஷ் தற்போது நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தின் கதை ’புதுப்பேட்டை’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ’புதுப்பேட்டை’ படத்தில் கொக்கி குமார் வேடத்தில் தனுஷ் நடித்த நிலையில் அதே கேரக்டரில் தான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’புதுப்பேட்டை 2’ அல்லது ’கொக்கி குமார்’ என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் திரைக்கதையில் செல்வராகவன் உதவி செய்ய இருப்பதாகவும் தனுஷின் 50வது படத்தை பிரமாண்டமான வெற்றி படமாக உருவாக்க வேண்டும் என்ற தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’வை ராஜா வை’ என்ற படத்தில் கொக்கி குமார் என்ற கேரக்டரில் தனுஷ் நடித்திருப்பார் என்பதும் கிளைமாக்ஸில் அவர் வெறும் ஐந்து நிமிடம் வந்தபோதில் அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment