இளையதளபதி விஜய் தாயாருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 'சென்னையில் திருவையாறு'. பிரபல பாடகர், பாடகிகள் மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று அவர் பாடும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
ஷோபா சந்திரசேகரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், அவருக்கு பாராட்டு தெரிவித்தார். விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தனுஷ், விஜய் தந்தை எஸ்.ஏ.சியுடன் 'கொடி' படத்தில் நடித்துள்ளார். மேலும் ஷோபா சந்திரசேகருக்கு பிடித்த நடிகர்களில் மிக முக்கியமானவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments