அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய தனுஷ் பட நடிகை.. என்ன காரணம்..!

  • IndiaGlitz, [Sunday,May 14 2023]

தனுஷ் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை திடீரென அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நஸ்ரியா. அதன் பிறகு அட்லி இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ தனுஷ் நடித்த ’நையாண்டி’ மற்றும் ’திருமணம் என்னும் நிக்கா’ உள்பட பல படங்களில் நடித்தார். இவர் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நஸ்ரியாவுக்கு சுமார் 7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை நஸ்ரியா தற்போது எந்த படத்தில் நடிக்காவிட்டாலும் தனது கணவர் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன், இதுதான் சரி சரியான நேரம், உங்களுடைய அன்பையும் குறுஞ்செய்திகளையும் நான் மிஸ் பண்ணுகிறேன், மீண்டும் விரைவில் சந்திப்போம் என உறுதி அளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.