நடிகர் போண்டாமணி சிகிச்சைக்கு தனுஷ் உதவி: எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் போண்டாமணி இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இருப்பினும் திரையுலகினர் பலர் போண்டாமணிக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஒரு லட்ச ரூபாய் போண்டாமணி குடும்பத்திற்கு கொடுத்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் ஒரு லட்ச ரூபாய் போண்டாமணிக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதுகுறித்து போண்டாமணி வீடியோ ஒன்றில் கூறிய போது,’தனுஷ் தம்பி அவர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் என்னிடம் வந்து சேர்ந்தது. சரியான நேரத்தில் நீங்கள் செய்த உதவி எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய உதவியாக உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, தனுஷை அடுத்து மேலும் சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறுநீரக பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணிக்கு ₹1 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகர் தனுஷ்.. வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த போண்டாமணி!
— Esh Vishal (@eshvishal) September 25, 2022
#Bondamani | #Dhanush | great @dhanushkraja na pic.twitter.com/DCawFb0tOH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments