'D50' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'D50’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர். 'D50’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி படப்பிடிப்பின் போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதில் தனுஷ் மொட்டை தலையுடன் நிற்பதை பார்க்கும்போது வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

சமந்தா, த்ரிஷாவை அடுத்து பாங்காக் தெருக்களில் ஜாலி மூடில் அஞ்சலி.. வைரல் புகைப்படங்கள்..!

கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் த்ரிஷா வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பாங்காக் சென்று இருக்கும் நடிகை அஞ்சலியும் அந்நாட்டில் உள்ள தெருக்களில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170': சூப்பர் அப்டேட் கொடுத்த லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை லைகா நிறுவனம்

இன்று முதல் பிக்பாஸ் சீசன் 7 தொடக்கம்.. போட்டியாளர்களின் முழு விவரங்கள் இதோ..!

விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று முதல் 7வது சீசன் தொடங்குகிறது. 6 சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலகநாயகன்

புதிய பிசினஸ் தொடக்க விழா.. முதல் பட ஹீரோவை மறக்காமல் அழைத்த நயன்தாரா

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா 9 ஸ்கின் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் தனது முதல் பட நாயகனை மறக்காமல் உள்ளார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று உடல் உறுப்புகளை தானம் செய்யும் மார்கழி திங்கள்' குழுவினர்

மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய  'மார்கழி திங்கள்' திரைப்பட குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.