அண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் தனது அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு அவ்வப்போது வித்தியாசமான பரிசுகள் கொடுத்து அசத்தும் நடிகர் தனுஷ், தற்போது இரண்டு புத்தகங்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
The Hunting Party மற்றும் The Silence Of the Girls என்ற இரண்டு புத்தகங்களும் தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் என்றும் இந்த புத்தகங்களின் சிறப்பு குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் இந்த புத்தகங்கள் பரிசாக கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள் என்றும் அதே போன்ற ஒரு உணர்வில்தான் தற்போது இருப்பதாகவும் கீதாஞ்சலி செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த இரண்டு புத்தகங்களையும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணிக்கு அசத்தலான பரிசு கொடுத்து அசத்திய நடிகர் தனுசுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments