'ஜிகிர்தண்டா 2' முதல் விமர்சனத்தை வெளியிட்ட தனுஷ்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபாவளி விருந்தாக இன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’, கார்த்தி நடிப்பில் உருவான ’ஜப்பான்’ மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ’ரெய்டு’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியுள்ள நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் ரசிகர்களின் விமர்சனங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை நேற்றே பார்த்த நடிகர் தனுஷ் தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ’ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் பார்த்தேன். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அருமையான படைப்பு. வழக்கம் போல இந்த படத்திலும் அவர் அசத்தியுள்ளார். எஸ்சூர்யா, ராகவா லாரன்ஸ் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் அற்புதம் செய்துள்ளார். கடைசி 40 நிமிடங்கள் இந்த படம் உங்கள் இதயத்தை கவரும், படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என பதிவு செய்துள்ளார்
’ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தினத்தன்று நடிகர் தனுஷ் பாசிட்டிவ் வசனங்கள் கொடுத்துள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Watched jigarthandaxx. Fantastic craft from @karthiksubbaraj, being amazing has become an usual deal for @iam_SJSuryah. As a performer @offl_Lawrence is a revelation. @Music_Santhosh u r a beauty. The last 40 mins of d film steals your heart. All the best to the crew and cast.
— Dhanush (@dhanushkraja) November 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com