நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Wednesday,November 27 2024]

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்த வீடியோ தொகுப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 18ஆம் தேதி வெளியான நிலையில், இந்த வீடியோவில் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்த காட்சிகளை தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக, பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர் பார் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர, தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

நமக்கு தான் புரியல.. 3 வருடங்களுக்கு முன்பே காதலை அறிவித்த கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்று வருடங்களுக்கு முன்பே தனது வருங்கால கணவரின் பெயரை அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் யாருக்கும் புரியாத நிலையில்,

கணவருடன் மூகாம்பிகை, தனியாக திருப்பதி.. கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா..!

நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கும், தனியாக திருப்பதி திருமலை கோவிலுக்கும் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க... 'விடுதலை 2' வசனம் யாருக்கு?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கேரக்டர்களில் நடித்த 'விடுதலை 2' படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

செவ்வாய் தோஷம் இருந்தாலே திருமணம் ஆகாதா?

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், ஜோதிட ஆய்வாளர் பி. ராஜேந்திரன் அவர்கள் செவ்வாய் தோஷம் பற்றிய பொதுவான தவறான கருத்துக்களை உடைத்துள்ளார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்.. கமல்ஹாசனின் முக்கிய அறிக்கை..!

இன்று அரசியலமைப்பு தினத்தை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இதுகுறித்து உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: